திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
04.03.2024 அன்று மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் மன்னார்குடி நகர பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, 3 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பணம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த நெடுவாக்கோட்டை, மேல தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் வீரமணி (வயது-45), மன்னார்குடி தாலுக்கா, குறிச்சி, தெற்கு தெருவை சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் கருணாநிதி (வயது-48), மன்னார்குடி, உப்புகார தெருவை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் பிரசாத் (வயது-38), மன்னார்குடி வடகரை, சங்கு தீர்த்தம் பகுதியை சேர்ந்த கமால் பாட்ஷா என்பவரின் மகன் மைதீன் (வயது-58) ஆகியோர் கைது.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூபாய்.13,000/- மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பணம் ரூபாய்.57,350/- மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் நடவடிக்கையாக மேற்படி, கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறப்பாக செயல்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர்களை கைது செய்து, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், மன்னார்குடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.ஸ்ரீநிதி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்கள்.
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 9498100865 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், புகார் தெரிவிப்பவர்களின் விபரம் இரகசியமாக காக்கப்படும் என்றும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.