#PedalforVote என்ற ஊக்கொலியோடு இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தங்களது வாக்களிக்கும் கடமையினை ஊக்குவிப்பதற்காக சைக்கிள் பேரணியை நடத்தியது. இதில்700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணியை தமிழ்நாட்டின் தலைமை தேர்தல்அதிகாரி சத்யபத்ர சஹூ இ.ஆ.ப கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
கூடுதல் தலைமை செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப., மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளர்கள் லலிதா இ.ஆ.ப.,ஷங்கர் லால் குமாவத் இ.ஆ.ப., மற்றும் பல அதிகாரிகள் பொதுமக்களுடன் சேர்ந்து இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர்.