சென்னையில் இருந்து காதலனுடன் கிரிவலத்திற்கு சென்ற இளம் பெண்னை ஒலக்கூரில் பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை விக்கிரவாண்டியில் போலீசார் பிடித்தபோது இரு காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளியை காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை சாலையில் ஒலக்கூரில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண் உடல் அருகே நின்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரனையில், சென்னை மாதவரம், திருமலை நகரைச் சேர்ந்த ரமேஷ் என்ற கல்லூரி இளைஞரும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடையில் வேலை செய்து வந்த கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த பவித்ரா, என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
இருவரும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல இருசக்கர வாகனத்தில் சென்றபோது திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர் கிராமத்தில் இளைஞர்கள் இருவர் அந்த பெண்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றபோது இளம்பெண் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஒலக்கூர் போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் பல்வேறு குற்றவழக்குகளில் உள்ள திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் என்பவர் குற்றவாளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குற்றவாளியை போலீசார் விக்கிரவாண்டி பகுதியில் பிடித்த போது போலீசார் அய்யப்பன், தீபன் ஆகிய இருவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் குற்றவாளியை துப்பாக்கியால் கனுக்காலில் சுட்டு பிடித்தார். குற்றவாளியால் வெட்டு பட்ட இரு போலீசாரும், குண்டடிப்பட்ட குற்றவாளியும் முண்டியம்பாக்கம அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சமபவம் விழுப்புரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.