வருகின்ற 2024-லோக்சபா தேர்தலை முன்னிட்டு, எந்தவித இடையூறும் இன்றி சுமூகமான முறையில் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சென்னை கல்பாக்கத்தில் செயல்படும் மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையின் (Central industrial security force) 2 அணிகள் கோவை வந்தடைந்தது. தேர்தல் பணிக்காக கோவைக்கு வந்த மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை அணிகளை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் அதிகாரிகள் இரயில் நிலையத்தில் வரவேற்றனர்.