ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோவை மாநகர் முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு அழகாக காட்சி அளிக்கின்றன. இதேபோல் சிலைகள் பூங்காக்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு புத்தம் புதியதாக காட்சி அளிக்கின்றன.
இதேபோல் பல்வேறு பணிகள் கோவை மாவட்டத்தை மேலும் அழகாக்க நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தலைமையிலும் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவைக்கு மக்கள் அனைவரையும் எளிதில் கவரும் வகையில் இந்த பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோபாலபுரம், எஸ்பிஐ காலணியில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதற்கான பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தொடங்கி வைத்தார். இந்த பூங்கா மட்டும் கட்டப்பட்டு திறக்கப்பட்டால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தாலும் ஓய்வு பெற இந்த பூங்காவானது மிகவும் உதவியாக இருக்கும்.