பேராவூரணி gain sports academy யில் தடகள பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மதன்பட்டவூர் -சிவணாம்புஞ்சை கிராமத்தில் இயங்கிவரும் தாய்மண்பாலம் அமைப்பை சேர்ந்த அருமை நண்பர் திரு R.சத்தியசுந்தரம் IPS அவர்கள் ஏற்பாட்டில் 2 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்கள். சோழ நாடு கிராமப்புற அமைப்பின் கீழ் இயங்கும் gain sports academy நம்பகுதி மாணவர்களுக்கு இலவச பயிற்சினை எந்த வித கட்டணமும் வசூலிக்காமல் இதுவரை மாணவர்கள் மட்டும் அல்லாது மாணவிகளையும் தடகளம், வாலிபால், ஹாக்கி, கபாடி உள்ளிட்ட மாவட்ட, மாநில அளவில் உருவாக்கி நம் பகுதி மாணவர்களை விளையாட்டின் மூலம் உடல் வலிமை, மனவலிமையை உருவாக்கி காலையிலும், மாலையிலும் தவறாது வருகை புரிகின்ற தலைமை பயிற்சியாளர் நீலகண்டன் சார், சுப்பிரமணியன் சார், அருண் தம்பி, கௌரி மேடம் இத்தருணத்தில் நன்றி களை சொல்லி 2 ஆண்டுகளாக இலவச பயிற்சியினை வழங்கி வருவதை நான் எடுத்து கூறியவுடன், இங்கு வருகைபுரிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, இயன்றதை செய்கிறேன் என்று சொல்லி, அகாடமி மாணவர்களுக்கு தேவையானதை கேட்டறிந்து அதை உடனடியாக அனுப்பி வைத்து உதவி புரிந்த நண்பருக்கும், நணபருடன் சேர்ந்து உதவி புரிகின்ற தாய்மண்பால நண்பர்கள் கபிலன், சுதாகர், பிரகாஷ், ராஜசேகர், அன்பரசன், பாலமுருகன், முத்து அண்ணன், முத்துராஜா ஆகிய அனைவருக்கும் என் சார்பாகவும், அகாடமி சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.