விடுதலை போராட்ட வீரன் வீரவாஞ்சிநாதன் பெயர் பெற்ற தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர நுழைவுப் பகுதியில் போக்குவரத்திற்க்கு பெறும் இடையூராய் அமைந்துள்ள சுமார் 250 வருடம் பழமைவாய்ந்தவையாக கருதப்படும் கேரள சமஸ்த்தானம் முடிவுறும் மற்றும் சென்னை மாகாணம் துவங்கும் எல்லை பகுதி என்பதால் திருவிதாங்கூர் சமஸ்தானம் கொண்ட சேர மண்டலமாக விளங்கிய பகுதியில் அப்போதெல்லாம் எல்லை பகுதிகளில் இது போன்ற அலங்கார வளைவுகளை நிறுவி பெருமை கொண்டு வந்துள்ளனர். அப்படி உருவாக்கப்பட்ட இந்த நிரந்தர அலங்கார வளைவு தான் தற்ப்போது பல ஆண்டுகளை கடந்தும் அளவிட முடியாத போக்குவரத்து அதிகரித்துள்ள இந்த காலகட்டத்திலும் 1956 லிருந்து செங்கோட்டை நகராட்சி வசம் பராமரிப்பில் இருந்து வருவதும் தற்ப்போது கேரளா- தமிழ்நாடு எல்லை பகுதில் அமைந்துள்ள முக்கிய நகரமாக உள்ள செங்கோட்டை நகர நுழைவு பகுதியில் அதுவும் காவல் நிலையம் , கனரா வங்கி குடியிருப்புகள் அருகில் இருக்கும் இந்த வளைவு கேரளா செல்லும் கன ரக வாகனங்கள், ஆம்புலன்ஸ், ஏர்போர்ட், சுற்றுலா பயணிகள், ரயில் பயணிகள், பேருந்துகள், சிறு குறு வாகனங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெருக்கடியினால் ஏற்ப்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
இந்த வளைவை அகற்றியும், அதேவேளையில் இந்த வரலாற்று சின்னத்தில் உள்ள புராதன துவாரக பாலகர் சிலைகள், மற்றும் பழங்கால சிற்ப சுவடுகள், சின்னங்கள் போன்றவற்றை பாதுகாத்து அதன் வேலைபாடுகள் மாறாவண்ணம் சற்று தள்ளி பெரிய ஆர்ச்சை செங்கோட்டை நகராட்சி மூலம் அமைத்திடவும் இதனால் பெறும் வாகன நெருக்கடி, சிறுசிறு விபத்துக்கள், நேர விரையம் தவிர்க்கப்படும் என பல அறிவு ஜீவிகள் கருத்து தெரிந்திருந்தும்… இன்னும் நெடுஞ்சாலைத்துறையோ, செங்கோட்டை நகராட்சி நிர்வாகமோ ஏனோ..? இந்த விஷயத்தில் முனைப்பு காட்டாதது வியப்பாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல் நேரங்களில் அவற்றை சரி செய்ய அருகில் உள்ள காவல் நிலையத்தார் பலரும் தலைகிழ் நின்று தண்ணீர் குடிக்கும் நிலைதான்…, அவர்களின் பரிதாபா நிலை, பார்ப்போரை இறக்கம் கொள்ளச் செய்கிறது.ஆயினும் இது நினைவுச்சின்னம் என்பதாக வைத்து அழகும் பார்க்க முடியாது இதே போன்று அருகில் உள்ள தென்காசியில் பிரிட்டிஷ்சார் வைத்த வளைவு மேம்பால பணிக்காக போக்குவரத்துக்கு இடையூராக இருந்தவேளையில் சிலஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது, அதே போன்று V.K.புதூர் பகுதியில் இருந்த அலங்கார வளைவும் அகற்றப்பட்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டியதாகும்.
எனினும் சாலை விரிவாக்கம், போக்குவரத்துக்கு இடையூறு, பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்பதால் நடப்பாண்டிலேயே இதனை அகற்றி சாலையை அகலப்படுத்திடவேண்டும் என்கிற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் முனுமுனுக்கத் துவங்கியுள்ளனர். இதற்கான நடவடிக்கை எடுக்க கோரி இடதுசாரி கட்சிகளும் போராட்டத்தை நடத்த துவங்கியுள்ளனர். எனவே போர் கால அடிப்படையில் உடனடியாக இந்த அலங்கார வளைவை அகற்றி நகர போக்குவரத்து நெரிசலை சீராக்க மாவட்ட நிர்வாகமும் அழுத்தம் தந்து செயல்படுத்த வேண்டும்.
இரா.பூவையா
தென்காசி