தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு.மனோகர் அவர்கள் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை தன் சொந்த செலவில் தகனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர்களை கேட்டபோது, நான் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் போதே செய்ய ஆரம்பித்து விட்டேன். தற்போது மருத்துவகல்லூரி காவல்நிலையத்தில் பணியில் சேர்ந்த பிறகு 200க்கும் மேற்பட்டவர்களை தகனம் செய்துள்ளேன். மேலும் நான் Money Mind-ல் செய்யவில்லை. துப்புரவு தொழிலாளி, டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கு செலவு செய்வேன். ஆதரவற்றோர் என்று அடையாளம் தெரிந்து தெளிவு செய்து கொண்டபிறகு தான் தகனம் செய்வேன். உங்களுக்கு எப்படி இந்த எண்ணம் வந்தது என்று கேட்டபோது, காவல்துறை வேலை என்று வந்துவிட்டால் எல்லா வேலைக்கும் தயாராக இருக்க வேண்டும். உதாரணமாக நானே என் துணியை துவைத்து சலவை செய்து கொள்வேன். எனது காலணியை நானே பாலிஷ் செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.
இதைப் பற்றி உங்கள் வீட்டில் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டபோது, வெளியில் பெருமையாக சொல்வார்கள். ஆனால் தொற்று ஆகிவிடுமோ என்று பயப்படுவார்கள் என்று தெரிவித்தார். இப்பணியில் அவருக்கு தற்போதும் துணையாக இருப்பவர் திரு. ரகு அவர்கள். தற்போது திருவோணம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக இருக்கின்றார். இந்த எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டபோது நம்மளையும் தூக்கி போட நாலு பேர் வேணும்ல என்று சொன்னார்.