நித்தம் மலரும் காலைப்பொழுது
ஒரு மரபுக்கவிதை!
நித்தம் மலரும் நம்பிக்கை மலர்களே
அதன் மோனைகள்!
நித்தம் வரும் நல்வாய்ப்புகளே
அதன் எதுகைகள்!
நித்தம் தோன்றும் சவால்களே
அதன் இயைபுகள்!
நித்தம் எதிர்ப்படும் துயர்களே
அதன் முரண்கள்!
நித்தம் கிடைக்கும் மகிழ்ச்சிகளே
அதன் சந்தங்கள்!
சந்தங்கள் மாறலாம்
முரண்கள் முடக்கலாம்
இயைபுகள் இடர்தரலாம்
இருப்பினும் ஓய்ந்துவிடாமல்
எதுகையைக் கைகொண்டு
மோனைகளை மாலைகளாக்கினால்
நம் வாழ்க்கை என்பதே
அக்கவிதையின் தலைப்பாகிட
நாம் அனைவருமே ஆகிடுவோம்
அக்கவிதையை வாசிக்கும் புதுக்கவிதைகளாக!!
– மீனாட்சி வெங்கடேஷ்