மே 3 அன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ் மற்றும் எல்ஐசி முகவர் தீபா இன்பசேகரன் இணைந்து நடத்தும் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தன்று ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் வழங்கும் விழா திருச்சி ஜீயபுரத்தில் 3/5/2024 காலை 10 மணியளவில் நடைபெற்றது.
முத்தரசன்நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தியாக ஆதிசிவன் தலைமை வகிக்க, ஜீயபுரம் காவல் துறை சதிஷ் மற்றும் முத்தரசநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் திருமதி.பத்மா, முத்தரசநல்லூர் பள்ளி மேலாண்மை குழு தலைவி அரசு தொடக்கப்பள்ளி திருமதி.பிரம்மாவதி, திருமதி ஐஸ்வர்ய லட்சுமி LIC வளர்ச்சி அதிகாரி அனைத்து பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி நகரின் மையப் பகுதியான யானை பாலம் சிக்னலில் வைத்து நீதியின் நுண்ணறிவுக் குழுமம் மற்றும் தென்காசி ரத்த தான கழக கூட்டமைப்பு இணைந்து மே 3 தேதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவற்றை தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் எம்.எஸ்.மணி அவர்கள் துவக்கி வைக்க, அவரோடு தென்காசி மாவட்டத்தில் முதல் பெண் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாந்தி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நீதியின் நுண்ணறிவு எஸ்.ஆனந்த், மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்.பூவையா, ஆர்.மஹேந்திரன் ஆகியோரும் தென்காசி ரத்த தான கழக கூட்டமைப்பினுடைய நிர்வாகிகள் பூக்கடை சரவணன், கோபி, முகமது அன்சர் மற்றும் தென்காசி நகர EX MC கோபால் @செந்தில், அகில இந்திய காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் காசி பாண்டியன்,MBA.., BL. வழக்கறிஞர் திருமலை குமார் BA.,BL. திருமதி சி.மாரிச்செல்வி மற்றும் பணி நிறைவு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நயினார், எஸ்பிகே மெட்ரிகுலேஷன் பள்ளி உரிமையாளர் கோபிநாத் மற்றும் சிறுவர்கள், பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் தாகம் தணிக்க பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் என பலரும் நீர் மோர் வாங்கிப் பருகி பாராட்டி சென்றனர்.