காற்று சுகமாவதில்லை
வியர்வை சிந்தாவிடில்!
நிழல் சுகமாவதில்லை
வெயிலில் அலையாவிடில்!
தண்ணீர் சுவையாவதில்லை
தாகம் தவிக்காவிடில்!
உணவு அமிர்தமாவதில்லை
பசி பட்டினி இல்லாவிடில்!
மழை அருமையாவதில்லை
கோடை கொளுத்தாவிடில்!
பணம் பெரிதாவதில்லை
வறுமை வாட்டாவிடில்!
செல்வம் சேர்வதில்லை
சேமிக்க தெரியாவிடில்!
காதல் வயப்படுவதில்லை
அன்பு பெருகாவிடில்!
மகிழ்ச்சி மலிவாவதில்லை
உழைக்க தயாராகாவிடில்!
வாழ்க்கை புரிவதில்லை
ஏமாற்றம் எதிர்கொள்ளாவிடில்!
வெற்றி கிட்டுவதில்லை
மனஉறுதி இல்லாவிடில்!
எதுவுமே நடப்பதற்கில்லை
நீ துணியாவிடில்!
தோல்வி கூட கிடைப்பதில்லை
நீ முயற்சி செய்யாவிடில்!
– மீனாட்சி வெங்கடேஷ்