30.04.20224 ம் தேதியன்று வடவள்ளி காவல் நிலைய சரகத்தில் அரசு போக்குவரத்துகழக நகர பேருந்து ரூட் நெம்பர் S26 நஞ்சுண்டாபுரம் to மருதமலை செல்லும் பேருந்தில், மருதமலை பஸ் நிலையதில் பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் கேட்பாரற்று கிடந்த கிரே கலர் ஹேன்ட் பேக்கை நடத்துனர் R.சசிகுமார் ஓட்டுநர் M. முருகராஜ் ஆகியோர் தணிக்கை செய்து பார்த்ததில் அதில் கட்டுகட்டாக பணம் இருந்ததது. அதனை மருதமலை கிளை மேலாளர் R.முருகேசன் அவர்களிடம் ஒப்படைக்க மேலாளார் வழிகாட்டுதலின்படி வடவள்ளி காவல் ஆய்வாளர் M.பிராங்கிளின் உட்ரோ வில்சன் அவர்களிடம் ஒப்படைத்தனர். அந்த பேக்கினை பெற்று சோதனை செய்த போது அதில் ரூ1,95,890/- ரொக்க பணம், மற்றும் கடவுச்சீட்டு, பாரதியார் பல்கலைகழக உதவி பேராசிரியர் சாரளா அவர்களின் ID கார்டை தணிக்கை செய்து அதில் கிடைத்த தகவலின் படி விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட பொருள் மற்றும் பணத்தின் உரிமையாளர் பாரதியார் பல்கலைகழகத்தில் பணிபுரியும் Associate Professor computer application Dept. Bharathiyar University சாரளா என கண்டறிந்து அவர்களை காவல்நிலையம் வரவழைத்து பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் ஒப்படைத்து வடவள்ளி காவல் ஆய்வாளர் M. பிராங்கிளின் உட்ரோ வில்சன் அவர்கள் நகர பேருந்தின் நடத்துனர் R.சசிகுமார் ஓட்டுநர் M. முருகராஜ் ஆகியோர்களின் நேர்மையை பாராட்டி பொன்னாடை போர்த்தி வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இது போன்று பலரும் முன்னுதாரணமாகவும் வாழ்க்கை நெறிகளாகவும் கடைபிடிக்க வடவள்ளி காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.