பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உமன்ஸ் பாயிண்ட் இன்ஸ்டிடியூஷன் ஆப் பேஷன் டெக்னாலஜி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி பாஸ்கர் கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளை வழங்கினர். அதில் சிறப்பு விருதாக சமூக சேவைக்கான விருதை நிரோஷிகா என்ற பெண்ணுக்கு வழங்கி கௌரவித்தார்.