மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற அலுவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் 27.04.24ம் தேதி காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) ஜெயக்குமார், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணையதள குற்ற பிரிவு) முனைவர் சிவசங்கர், ஆகியோர் உடனிருந்தனர். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் உள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் ஆகியவற்றை காவல் நிலைய பதிவுகளும் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள பதிவுகளும் ஒன்றாக இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், சாட்சிகளை உரிய வாய்தா தேதியில் ஆஜர்படுத்தவும், நீதிமன்ற அழைப்பாணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சார்வு செய்தும், நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் நிகழ்வுகளை உடனுக்குடன் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் நீதிமன்றத்தில் குறிப்பிடும் குறைகளை அவ்வப்போது காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையங்களின் கொலை வழக்கில் ஆயுள் தண்டணை தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு நீதிமன்ற பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளினர்களை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.