மே-3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனைபார்வை மற்றும் ஜனநாயக தூண் பத்திரிகை ஆசிரியர் Dr. நா.சரண்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் படி, சென்னை மதுரவாயல் மார்க்கெட் பகுதியில் 03/05/2024 அன்று மதியம் 12மணி அளவில் தேனைபார்வை மாத இருமுறை பத்திரிகை மற்றும் ஜனநாயக தூண் மாத இதழ் இணைந்து நடத்திய சுட்டெரிக்கும் கோடை கால வெயிலின் தாகம் தணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீர்மோர், பழரசம் மற்றும் பழங்களை, பொதுமக்களுக்கும் சாலையில் சென்ற வாகன ஒட்டிகளுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரவாயல் போக்குவரத்து ஆய்வாளர் ராமதுரை, தமிழ்நாடு பத்திரிககையாளர் நலச்சங்க தலைவர் S.சரவணன், M.E.ஸ்டாலின் 144-வது வட்ட செயலாளர் தி.மு.க மற்றும் சென்னை மாமன்ற உறுப்பினர், M.சாமுவேல்ராஜ் சமுகஆர்வலர், M.M.முருகன் மதுரவாயல் பகுதி தலைவர் காங்கிரஸ் கமிட்டி, M.வில்விஜயன் மாவட்ட துணை கழக செயலாளர் அ.ம.மு.க., P.ராஜா மதுரவாயல் தொகுதி துணை செயலாளர் வி.சி.க., D.பலராமன் மாவட்ட துணைத்தலைவர் காங்கிரஸ் கமிட்டி, M.மதன் அ.இ.அ.தி.மு.க, G.மூவேந்தன் தி.மு.க, S.சொக்கலிங்கம் தேசியவாத காங்கிரஸ், J.மோகனசுந்தரம் மற்றும் சென்னை நிருபர்கள் R.ரவிகுமார் துணை ஆசிரியர், N.சதீஷ்குமார், T.ராமேஷ்வரன், S.வரதராஜன், S.மாரிமுத்து, V.தமிழரசு, சேகர், D.ஞானராஜ், K.சரத்குமார், P.கார்த்திக், S.ஆமோஸ், V.மணிகண்டன், T.மனோஜ்குமார், P.மகேந்திரன், S.பாலாஜி, ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை P.வெங்கடேசன் தேனைபார்வை பத்திரிகை இணை ஆசிரியர் மற்றும் A.ஷாகின்ஷா, V.லோகேஸ்வரன், ஜனநாயக தூண் நிருபர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.