சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா?
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே “உயில் பத்திரம்” ஆகும்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்..
முக்கியமாக, ஒருவர் தான் சுயமாக சொந்தமாக சம்பாதித்ததை, சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது. ஏன் தெரியுமா? இதை பற்றிதான் பார்க்க போகிறோம்.
ஆண்டாண்டு காலமாய் இருந்துவருவதைதான் பூர்வீகம் என்று சொல்கிறோம்… அதேபோல உங்களிடம் ஏதாவது சொத்துக்கள் இருந்து, அதில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல், காலம் காலமாய் அனுபவித்து வருவதையே பூர்வீக சொத்து என்கிறோம்…
நம்முடைய மூதாதையர்கள் இந்த சொத்துக்களை உயில் எழுதி வைக்காமல் போனால் அது பூர்வீக சொத்தாக கருதப்படும். இந்த சொத்துக்களை அனுபவித்து கொள்ளலாமே தவிர, உயிலாக எழுதி வைக்க முடியாது..
அதேபோல, பிறப்பிலிருந்து இந்த வகையான சொத்தின் கீழ் பங்கு கொள்ளும் உரிமை உள்ளது.. மற்றபடி, அம்மா, பாட்டி, மாமா, சகோதரன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மூதாதையர் சொத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.
தாத்தா, பாட்டி இருந்தாலும்கூட, இந்த சொத்துக்களை பிரித்து வாரிசுகளுக்கு தர முடியாது. உயில் எழுதி வைக்காவிட்டாலும்கூட, அவர்களின் நேரடியாக வாரிசு அடிப்படையில் பிள்ளைக்கு வந்துவிடும். ஒருவேளை, பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க வேண்டுமானால், தங்களின் பெயருக்கு சொத்துக்களை மாற்றி, அதற்கு பிறகே உயிலாக எழுத முடியும்..
அதேபோல, ஒருவர் தன்னுடைய சொத்துக்களை, உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் அவருடைய ஆண் வாரிசுகளுக்குதான் நேடியாக போய் சேரும்.. ஒருவேளை அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லாவிட்டால், அம்மா வழி அல்லது அப்பா வழி சொந்தங்களுக்கு சொத்துக்கள் போய் சேரும்… அந்தவகையில் இறந்த நபரின் அம்மாவிற்கும் இந்த சொத்தில் பங்கு உண்டு.. இறந்தவரின் மனைவிக்கும் இதில் பங்கு உண்டு.