அடுத்தவர்களுக்காக ஆகாயத்தில் அலைந்திடும் ஆதவன்
ஆகாரத்தை கொடுக்க சுழன்றுவரும் பூலோகம்
உழைப்புக்கே உருவாக்கிய உருவங்கள் உழைப்பாளிகள்
உழுதுண்டு உழன்று உழைக்கும் உழவர்கள்
காட்டையும் கழனியாக்கி கஞ்சிதரும் தொழிலாளிகள்
கஷ்டத்தையும் வியர்வையாக்கி விளையவைக்கும் விவசாயிகள்
பசுஞ்சோலையில் பசியாற பாடுபடும் பாட்டாளிகள்
பாரெங்கும் உண்ணுவதற்கு உணவுதரும் கூட்டாளிகள்
புடைக்கும் உடம்புகளில் நரம்புகள் நடமாடும்
பூரிப்பும் புன்சிரிப்பும் எப்போதாவது இடம்பெறும்
கொஞ்சும் கூரைவீடுகள் கிராமத்து மாளிகைகள்
கொட்டும் மழையில் சொட்டும் ஓலைகள்
உழைப்பே உயிரினம் உள்ளத்திலே உறவினம்
உலகத்தில் மேதினம் உழைப்பாளர்கள் சீதனம்
- சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்