தென்காசி மாவட்டதில் தமிழகத்திலே முக்கியம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தின் ஓர் அங்கமாக திகழும் புலி அருவியில் உள்ள துரித உணவு பண்டங்கள் விற்கும் கடைகளில் தான் இந்த நிலை ஸ்ரீ சரவணன் டீ ஸ்டால் மூலம் நடத்தப்படுகின்ற இந்த கடையானது சுகாதாரமற்ற முறையில் விலைப்பட்டியல் ஏதுமின்றி குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், போன்ற மற்ற பகுதிகளை விட சிற்றருவில் உள்ள கடைகளில் மட்டும் கட்டுப்பாடற்ற விலைகளில் காடை முட்டை, ஸ்வீட் கான், காலிஃப்ளவர், கப்பை சிப்ஸ், மிளகாய் பஜ்ஜி, வாழக்காய் பஜ்ஜி போன்ற சுற்றுலாப் பயணிகளில் வரும் பெண்கள் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாக இருக்கக்கூடிய பண்டங்களின் விலைகளைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாயிருக்கின்றனர்.
ஒரு உணவு பண்டத்திற்கு தேவையான மூலப் பொருட்களின் செலவினங்களை கொண்டும் அதனை உற்பத்தி செய்ய ஆகக்கூடிய செலவு மற்றும் கடையாள் சம்பளம், மின்சாரம் மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதிகப்படியான விற்பனை குறைந்தபட்ச லாபம் கணக்கிட்டு தான் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள கடை ஊழியர்களிடத்தில் இவ்வளவு விலை இருக்கிறதே மற்ற இடங்களை காட்டிலும் என்று சுற்றுலா பயணிகள் கேள்வி கேட்கும் போது கடை ஊழியர்கள் அவர்களிடத்தில் கோபம் கொண்டு (ஏனென்றால் எல்லோரும் அப்படித்தான் கேட்கிறார்களாம்) உல்லாசமாக இருக்கத்தானே சுற்றுலா வருகிறீர்கள். அப்போ செலவுகள் ஆகத்தான் செய்யும். இஷ்டம் இருந்தால் வாங்கி தின்னுங்கள். உங்களை நாங்கள் கட்டாயப்படுத்த வில்லையே? நாங்கள் அதிகப்படியான விலை கொடுத்து தான் இந்தக் கடைகளை குத்தகைக்கு எடுத்திருக்கிறோம் என்றும் இதில் பலரையும் கவனிக்கவும் எங்களுக்கு கட்டுப்படியான விலையை நாங்களே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று எரிச்சல் கலந்த வேதனையோடு லஞ்சம் அவலத்தை அதற்கே உண்டான திமிரோடு கடிந்து கொள்ளும் விதம் மேலும் கேட்போர்களை வேதனை அடையச் செய்கிறது.
சில லட்சங்களை முடக்கி ஒரு சிலருக்கு மட்டும் பல லட்சங்கள் சம்பாதிக்க குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பணத்தை சுரண்டி அதிக லாபத்தில் வாழ துடிக்கும் இவர்களை கட்டுப்படுத்த போவது யார்…? இவர்களை கொள்ளையடிக்க விட்டு அதன் மூலம் குளிர்காயும் நபர்கள் யார்..?
இந்த விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இன்றைய சூழ்நிலையில் உள்ள விலைவாசியை குழந்தைகள் மற்றும் குடும்பங்களில் உள்ள நபர்களோடு சிறிய பட்ஜெட் போட்டு மனதில் உள்ள வேதனைளை, மனச்சோர்வுகளை போக்க இது போன்ற சுற்றுலா தலங்களை பயன்படுத்துகின்ற நடுத்தர ஏழை மக்கள் கூட நிம்மதியாக தான் குளித்து முடித்து விரும்பிய உணவு பண்டங்களை குழந்தைகளுக்கு கட்டுபடியான விலைகளில் வாங்கி குடுக்க முடியாத நிலை இன்றைக்கு புலியருவி போன்ற இடங்களில் இருப்பது என்பது நேர்மைக்கு புறம்பான ஒரு செயலாக இருப்பது என்பது ஏனோ..? அவர்கள் மட்டும் காரணமல்ல. அதற்குப் பின்னால் அவர்களைச் சுரண்டித் தின்னும் கூட்டமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதை அவர்களின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது…
மேலும் சுகாதாரமற்ற நிலையும் என்பதும் கண்கூடாக காண முடிகிறது. உணவு தாயரிப்பு ஊழியர் தன் தலையிலே முடியினை மறைத்தும், கைகளிலே பிளவுஸ் அணிந்து பாதுகாப்பான முறையில் உணவு பண்டங்களின் மீது ஈக்கள் கொசுக்கள் அண்டாவண்ணம் அதை பாதுகாப்பான முறையில் மூடி வைத்து அவ்வாறு வழங்கப்படுவதை குற்றாலம் பேரூராட்சிக்கு உண்டான சுகாதார ஆய்வாளர் அவ்வப்போது ஆய்வு செய்து… அந்த உணவு இரசாயன சேர்க்கைகள் சேர்க்கப்படுகிறதா…? மலிவான ரீசைக்கிள் ஆயில்கள் பயன்படுத்தப்படுகிறதா…? முறையாக fssai சர்டிபிகேட் வைத்துள்ளார்களா..? என்பதை ஆய்வு செய்தும்… Sales tax அதிகாரிகள் முறையான விலைகளில் பொருட்கள் விற்கப்படுகிறதா? சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விலைப்பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா…? என்பதையெல்லாம் முறையாக ஆய்வு செய்து நடைபெறும் இந்த பகிர் கொள்ளையை தடுத்து நிறுத்தவும் நியாயமான ஒரு விற்பனைக் கொள்கையை அமுல்படுத்தவும் லட்சங்களை தாண்டி வரும் ஏழை எளிய சுற்றுலா பயணிகளை பாதுகாக்க அதிகாரிகள் ஏதேனும் உருப்படியான நடவடிக்கை செய்வார்களா…? என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.