1864ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றளவும், 150 ஆண்டுகால மரபுகளை கொண்டு அமைந்துள்ள பத்திரபதிவு துறை 5 சட்டங்களை முழுமையாகவும், 9 சட்டங்களை பகுதியாகவும் நிர்வகிக்கிறது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண நிகழ்வுகள், நில பதிவுகள் மற்றும் சீட்டு, சங்கம் ஆகியவற்றை பதிவு செய்வதில் இத்துறை முக்கிய பங்குவகிக்கிறது.
மக்களிடம் அதிக தொடர்புகொண்டுள்ள உயரிய துறையாகவும் மேலும் மாநிலத்தில் ஈட்டக்கூடிய வருவாயில் இத்துறை பெரும் பங்காற்றி வருகிறது பெருமைக்குரியது. மாநிலம் முழுவதும் 9 துணை மண்டலங்கள் உள்ளது.
இதில் ஒவ்வொரு துணை மண்டலமும் ஒரு துணை பதிவு துறை தலைவரின் கீழ் செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 50 பதிவு மாவட்டங்களாக பிரித்து தமிழகத்தில் மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதில்தான் மிக முக்கியம் வாய்ந்த வருவாய் ஈட்டக்கூடிய தென்காசி நகரின் எண் #2 சார் பதிவாளர் அலுவலகத்தில் தினசரி தோராயமாக பத்து முதல் 50 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுவதாகவும் ஒரு பத்திரத்திற்கு 3000 முதல் 5000, 10000, 25 ஆயிரம் வரையிலும் எழுத்தர்களைக் கொண்டே புரோக்கர்களாக பயன்படுத்தும் நிலை இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. இதுபோக பத்திரப்பதிவுக்கு தனியாக ரூபாய் 200 வசூல் வேட்டை நடந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
அதற்காகவே சார் பதிவாளர் பின்புறம் உள்ள ரகசிய அறைக்கு ஒவ்வொருவரும் சிசிடிவி கேமராக்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தனியே சென்று கவனித்து வரும் நிலைஅப்பட்டமாக நடைபெறுகிறது.
தற்போது இங்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் சார்பதிவாளராக பணியாற்றி வரும் மதுரையைச் சார்ந்த திரு.மதிவாணன் உண்மையிலேயே தன்னுடைய மதியை கொண்டு தென்காசியில் மட்டும் 50 கோடிகளைத் தாண்டி சம்பாதித்து மாநிலத்தில் வாரிசுருட்டுவதில் முதலிடத்தை பிடிக்கும் தகுதிக்கு முன்னேறி இருப்பதாகவும் விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தனை தைரியமாக எவ்வாறு இப்படி செயல்பட முடிகிறது என்ற கேள்வி எழுகிற போது மாண்புமிகு பத்திர பதிவுத்துறை மந்திரி திரு.மூர்த்தி அவர்களுக்கு மிக நெருக்கமானவர் எனவும் தேவைக்கேற்ப குவியும் வருவாயில் சரியான பங்கு சென்று சேர்வதாகவும், அதனால் எவ்வளவு வில்லங்கம் கொண்ட பத்திரங்களாக இருந்தாலும் அசால்டாக கையாளும் திறமை படைத்த சார்பதிவாளராக திகழ்கிறார்.
எத்தனை புகார்கள் வந்தாலும், வந்த வேகத்தில் குப்பைக்குச் செல்கிறதாகவும் வழக்குகள் வந்தால் கூட சட்டத்தின் ஓட்டைகளை கண்டறிந்து சட்டஅறிவோடு சந்து பொந்துகளில் பயணிக்கும் திறமைமிக்கவர் என்று பதிவுத்துறை வட்டாரங்கள் புகழும் ஆன்மாவாக திகழ்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
பதிவான பத்திரங்களுக்கு உரிய தொகையை நம்பகமான ஆட்களை கொண்டு தான் வசிக்கும் தென்காசி மங்கம்மா சாலையில் உள்ள வீட்டிற்கு வரவழைத்து பங்கு போடும் ஷிtக்ஷீவீநீt ஆபிஸராக திகழ்கிறார் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஒரு பழமொழி உண்டு “ஐந்தில் வளையாதது.! ஐம்பதில் வளையுமா..?. ஆம் இவரிடம் ஆயிரங்கள் இருந்தால் வளைய முடியாததே எதுவும் இல்லை என்பதே இவரிடம் உள்ள கலை. இப்படி பல வடிவத்தில் உதாரண புருஷனாக திகழும் சார்பதிவாளரை ஒருபுறம் மக்கள் திட்டி தீர்ப்பதும், சில பத்திர எழுத்தர்கள் தென்காசிக்கு பிடித்த சாபம் இப்படி உள்ளதே என்றும் புலம்புவதும் காதில்கேட்க முடிகிறது. உதாரணமாக தென்காசி ரயில் நகர், தென்காசியில் இருந்து ஆய்குடி ரோடு சாய்பாபா கோவில் தாண்டி உள்ள நிலங்களின் மூலம் இதுபோன்ற பிளாட்டுகள் பதிய முடியாத ஆவணங்களை நிலுவையில் வைத்தும் விசாரணை செய்து பதிவது போல பதியும்போது கேட்கிற பணத்தை நிலம் வாங்குபவர் வாய்க்கரிசியாக நினைத்து போட்டு செல்வதாக குமுறுகிறார்கள்.
இதனைப் பற்றிய புகார்களுக்கு சென்னை ‘சாந்தோம்’ சாலையில் உள்ள பதிவுதுறை தலைமையகம் ஏனோ “சாந்தமாக” இருக்கிறது. அரசுக்கு வந்துசேர வேண்டிய வழிகாட்டி மதிப்பிற்கு எவ்வித பங்கமும் இல்லாமல் உபரியாக கோடிகளை வாரிசுருட்டும் இவரை இதுவரைஆண்டுகள் பல கடந்தும் இடமாறுதல் கூட செய்யாமல் இருப்பது ஏனோ சந்தேகத்தை வலுக்க செய்கிறது.
இனியேனும் பதிவுத்துறை இவர் போன்றோரை கண்காணிக்குமா…? ஊழல் பணத்தை கைப்பற்றுமா..? இத்தனை முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளியை தமிழக பத்திரபதிவு துறை தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வைப்பாரா…? என்ற எதிர்பார்ப்பை KGF படத்தின் இறுதி காட்சியை பார்ப்பதுபோல் ஆவலோடு எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்டவர்கள்.