இயற்கை மரங்கள் என்றது
நான் மாளிகை போதுமே என்றேன்
இயற்கை மழை என்றது
நான் குளிர்பதனி இருக்கிறதே என்றேன்
இயற்கை வெயில் என்றது
நான் வெப்பமூட்டியைக் காட்டினேன்
இயற்கை காற்று என்றது
நான் மின்விசிறியை சுழற்றினேன்
இயற்கை மலை என்றது
நான் உடைக்கும் எந்திரம் உண்டு என்றேன்
இயற்கை கடல் என்றது
நான் கடக்க கப்பல் காட்டினேன்
இயற்கை புயல் என்றது
நான் எச்சரிப்பு தொழிற்நுட்பம் உண்டு என்றேன்
இயற்கை கொடும் நோய் என்றது
நான் தடுப்பு மருந்துகள் என்றேன்
இயற்கை உயிர் என்றது
நான் செயற்கை கருமையம் என்றேன்
இயற்கை உலகம் என்றது
நான் திறன்பேசியை உயர்த்தினேன்
இயற்கை சிரித்தபடி மரணம் என்றது
நான் பணிவுடன் சரணடைந்தேன்!!
– மீனாட்சி வெங்கடேஷ்