அணில்குமார், AFRRO, Bureau of Immigration, Chennai International Airport என்பவர் அளித்த புகாரில், 16.06.2024ம் தேதி மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த Lee Tiek Vien என்பவரை சோதனை செய்தபோது எந்தவொரு ஆவணமும் இல்லாமல் 22 சிம்கார்டுகள் (SIM Card) வைத்திருந்ததாகவும், விசாரித்ததில் Online Scam-ல் ஈடுப்படும் நபர்களிடம் விற்பனை செய்ய எடுத்து செல்வதாகவும், அவருக்கு துணையாக கணேசன், முகமது மனாசீர் செயல்படுவதாகவும், எனவே மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவில் (Forgery Intelligence Wing) வழக்கு பதிவு செய்து Lee Tiek Yien என்பவரை கைது செய்து 17.06.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும, மேற்படி வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு மற்ற குற்றவாளிகளை கைது செய்ய எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் P.K.செந்தில்குமாரி, இ.கா.ப.. ஆலோசனையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, துணை ஆணையாளர் N.S.நிஷா, இ.கா.ப மேற்பார்வையில், மோசடி புலனாய்வு பிரிவு, உதவி ஆணையாளர் சச்சிதானந்தம் நேரடி கண்காணிப்பில், காவல் ஆய்வாளர் ஷீஜாராணி தலைமையிலான காவல் குழுவினர் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களான கணேசன் (மலேசியா), Tan Ching Kun(மலேசியா), மகேந்திரன் (மலேசியா), முகமது மானசீர் (குன்னுர்), ராம்ஜெய் (சேலம்), சூர்யபிரகாஷ் (மதுரை), ராஜ்பிந்தர் சிங் (பஞ்சாப்) ஆகியோரை 18.06.2024 அன்று கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களிடமிருந்து 550 சிம் கார்டுகள், 2 Laptop, 33 Bank Account Passbook/ Cheque book, 20 ATM Cards, 23 Mobile Phone, BMW Car, Malaysian currency-5485 Ringgits, Singapore currency-95 Dollers
ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டடது.
விசாரணையில் ஃபெடெக்ஸ் ஸ்கேம், டிரேடிங் ஸ்கேம், லோன் ஆப்
ஸ்கேம் போன்ற இணைய வழி பண மோசடிகளில் பயன்படுத்துவதற்காக, இந்த சிம்
கார்டுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது தெரியவந்தது.