தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மே மாதம் கோடை வெப்பம் தகிக்க ஆரம்பித்ததோ இல்லை தஞ்சை மாவட்ட தலைமையிடமான தஞ்சையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெப்பம் ஆரம்பித்துவிட்டது.
தஞ்சையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவருக்கு மயக்கவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக மருத்துவ மாணவ சங்கத்தினர் சமூகவலைதளங்களில் செய்திகளை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விவகாரம் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கவனத்திற்கு சென்றது. அவரும் கல்லூரி முதல்வரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாகா கமிட்டி தலைவர் Dr.இராஜராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மாணவ மாணவிகள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கல்லூரி மாணவிகளிடம் பேசியபோது, கல்லூரி வளாகத்திலேயே விசாகா கமிட்டி விழிப்புணர்வு பேரணி நடத்தியுள்ளோம். மேலும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் Dr.பாலாஜி நாதன் அவர்களை சந்தித்தோம். அவர் நம்மிடம் பேசும்போது, “விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நடைபெறும் விசாரணை விபரங்களை நான் தெரிவிக்க கூடாது. எல்லோரும் நான் தான் இந்த கமிட்டியின் தலைவர் என்று எழுதுகின்றனர். ஆனால் நான் இந்த கமிட்டியின் தலைவர் இல்லை. இந்த கமிட்டியின் தலைவர் Dr.இராஜராஜேஸ்வரி தான். புகாருக்கு உள்ளான பேராசிரியரை மருத்துவ கல்லூரி இயக்குநர் நாகைக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளார். இந்த கமிட்டியில் 10 நபர்கள் உறுப்பினராக உள்ளனர் அனைவரும் பெண்களே.
மாவட்ட அளவிலான கமிட்டிக்கு மாவட்ட ஆட்சியரே தலைவர் என்று முடித்துக் கொண்டார். பணியிட மாற்றம் என்பது பதவி உயர்வா? இல்லை பணிஷ்மெண்டா? என்று மக்கள் பேசுகின்றனர். கல்வியை கற்பிக்க வேண்டிய பேராசிரியர் கலவியை கற்பிக்க முயற்சிக்கின்றாரா? என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.