மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் மற்றும் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்களுக்கும் போதை பொருட்கள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் 25.06.2024ம் தேதியன்று புதுப்பட்டினம் காவல் சரகம் புதுப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமலதா தலைமையிலும், A.K.சத்திரம் காவல் சரகத்தில் ஆயங்குடிபள்ளம் வெங்கடேசா மேல்நிலைப்பள்ளியில் காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி தலைமையிலும், சீர்காழி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி ஆய்வாளர் திரு.அசோக்குமார் தலைமையிலும், திருவெண்காடு காவல் சரகம் சுவேதாரண்யஸ்வரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருமதி. மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தலைமையிலும், பூம்புகார் காவல் சரகத்தில் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் உதவி ஆய்வாளர் திரு.சேதுபதி தலைமையிலும், மணல்மேடு காவல் சரகம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மற்றும் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் மணல்மேடு காவல் ஆய்வாளர் திரு.ராஜா தலைமையிலும், பெரம்பூர் காவல் சரகத்தில் பெரம்பூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உதவி ஆய்வாளர் திரு.சாமிநாதன் தலைமையிலும், பாகசாலை காவல் சரகத்தில் எருமல் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் உதவி ஆய்வாளர் பாலச்சந்திரன் தலைமையிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் மாணவ, மாணவிகள் அனைவரும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு கல்வியில் முன்னேறுவது குறித்தும், போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பது குறித்தும், போதை பொருட்களை உட்கொள்வதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிப்பது பற்றியும், மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களை உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்லக்கூடாது என்றும் செல்போன் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகள் பற்றியும் மாணவ மாணவிகளிடேயே விளக்கப்பட்டது.