தூரத்தில் போகின்ற மேகங்களே
துன்பப்படும் பூலோகத்தை பாருங்களே
தூங்கும் விவசாயத்தை எழுப்பிவிட்டு
தூறல்களையும் தண்ணீரையும் தாருங்களே
பால்நிலவின் படுக்கை வெண்முகில்கள் பஞ்சுமெத்தை
வெண்கடலின் புகைச்சல் விண்ணிலே வில்வித்தை
காற்றுக்கும் கடலுக்கும் பிறந்த கார்முகில்கள்
காயும்பூமிக்கு கரிசனம்தரும் கண்ணீர் தூறல்கள்
விவசாய விளைநிலங்கள் வெறிச்சோடி கிடக்குது
விளையும் பயிர்களோ நீரின்றி தவிக்குது
அலையும் முகில்கள் ஆட்டம்போடு ஆகாயத்தில்
அள்ளியநீரை துள்ளியெழுந்து நீராட்டு பூலோகத்தில்
அண்ணாந்து பார்க்கும் அணைகளை நிரப்பு
அமைதியாய் கிடக்கும் ஆறுகளை உசுப்பேத்து
கதிரவனை மறைத்து கழனியை கதிராக்கு
கடல்நீரை உறிஞ்சி கண்ணீரையும் நன்னீராக்கு
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்