தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்தமாதம் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அதன் சுற்றுச்சுவரை உடைத்து போக்குவரத்து வசதி ஏற்பாடு தொடங்கியதே. இதைத் தொடர்ந்து மாணவ – மாணவிகளின் போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த விபரங்களை தெரிந்து கொள்ள கல்லூரி முதல்வரை சந்தித்தபோது இங்குள்ள சிறப்பு வசதிகளையும் மக்களுக்கு தெரிவியுங்கள் என்று விளக்கினார். இக்கல்லூரியின் முதல்வர் திரு. இரா.பாலாஜிநாதன் M.D அவர்கள் இக்கல்லூரியின் சிறப்பு பற்றி நம்மிடம் தெரிவித்ததாவது,
நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 5.10 கோடி காப்பீடு பலன் பெற்று தமிழ்நாட்டில் முதல் இடத்தை பெற்றது. இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஸ்கேன் போன்றவை முற்றிலும் இலவசம். இத்திட்டம் 2011ல் தொடங்கப்பட்டது.
இத்துறையின் பொறுப்பு தலைவர் திரு.Dr.வினோத் அவர்களின் பணிபாராட்டத்தக்கது. மேலும் நுரையீரல் சிகிச்சைக்காக Branchoscoy கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியின் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். இந்த சோதனையை வெளியே செய்தால் ரூபாய் 10000 வரை செலவாகும்.
மேலும் Polysomino Graphy என்ற கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரூபாய் 5 லட்சம் ஆகும். இந்தச் சோதனையை வெளியே செய்தால் ரூபாய் 6000 வரை செலவாகும். இக்கருவியின் மூலம் இரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு மூளையின் அதிர்வலைக் இதயதுடிப்பு, மூச்சுவிடும் அளவு, கண் அசைவு, கைகால் நகர்வுகள், நெஞ்சு வயிறு அசைவுகள் குறித்து ஆய்வு செய்யலாம்.
மேலும் தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மற்றும் இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக தஞ்சை அரசு மருத்துவமனைக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 11 நபர்கள் மூளைசாவு அடைந்துள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகளை கொண்டு மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 62 உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை நோயாளிளுக்கு பாதநோய் ஏற்பட்டு பாத இழப்பு ஏற்படுவதை தவிர்க்க மாநிலத்திலேயே STAMP (Stop Amputation) சிகிச்சை சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த கல்லூரியிலேயே படித்த நான் இந்த கல்லூரி முதல்வராக இருப்பது பெருமையா உள்ளது. மேலும் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று முடித்துக்கொண்டார். இந்த கல்லூரி மறைந்த முன்னாள் முதல்வர் அய்யா காமராஜர் அவர்களின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் பெயரிலுள்ள கேந்திரிய வித்யாலயாவில் நமது மேதகு குடியரசு தலைவர் அவர்கள் தனது மூன்றாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் ஆசிரியரக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.