திருச்சிற்றம்பலம் மற்றும் பேராவூரணி காவல்நிலையத்தில் என்.தர்மராஜன் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்தஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. 2002 காவல்பணியில் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்திற்கு 2016ம் ஆண்டு வந்துள்ளார். கிரைம் டீமில் பணிபுரிந்துள்ளார். சமுதாய அக்கறை கொண்டவர். பல பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இவர் பேராவூரணி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் இப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் லாட்டரி விற்பனை செய்துவரும் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மற்றும் குற்றபின்னணியில் இருப்பவர்களின் பட்டியல்களை கையில் வைத்துக் கொண்டு அதிரடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் பேராவூரணி காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை கண்டு அஞ்சுகின்றார்களோ இல்லையோ தலைமை காவலர் தர்மாவை கண்டு அஞ்சிநடுங்குகின்றனர் என்றும் காவல் கண்காணிப்பாளர் தனி தலைமை காவலருக்கு ஏற்ற தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து வருகிறார் என்பதுதான் நிதர்சனம்.
எத்தனையோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனி தலைமை காவலர்கள் பேராவூரணி காவல் நிலையங்களில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக பணியில் இருந்து உள்ளன ஆனால் தற்போது பேராவூரணி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்களின் அனைவரின் பார்வையும் தற்போது பணியில் இருக்கும் தலைமை காவலர் தர்மாவின் பக்கம் திரும்பி இருக்கின்றது என்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
தலைமை காவலர் தர்மா தன்னுடைய நேர்மையான மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறார் என மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
எது எப்படியோ தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகளின் கூடாரங்களை ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என சமீபத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.