LIC யில் BIMA SCHOOL என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகள் பயன் பெறும் வகையில் சிறுசேமிப்பு திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்தவுடன் பள்ளியை BIMA SCHOOL என்ற அங்கிகாரத்தை வழங்கி பள்ளி வளர்ச்சிக்கு எல்ஐசி மூலம் “தேவைப்படும் உபகரணங்கள்” வழங்கப்படும். குழந்தைக்கு சிறுசேமிப்பு மூலம் முதிர்ச்சிகாலம் முடிந்ததும் அதற்கு உண்டான தொகை வழங்கப்படும்.
இதன்படி LIC CA கிளையில் அட்வைசராக பணிபுரியும் திருமதி.தீபா இன்பசேகரன் அவர்களும், நுண்ணறிவு புலனாய்வு திருச்சி மாவட்ட நிருபரும் திரு இன்பசேகரன் அவர்களும் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கு இந்த பயனை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக தங்கள் கிளையின் வளர்ச்சி அதிகாரி திருமதி.ஐஸ்வர்யா லட்சுமி அவர்களை அழைத்துக் கொண்டு முத்தரசநல்லூர் பஞ்சாயத்து யூனியன் பிரைமரி பள்ளியில் இத்திட்டத்தை செயல்படுத்த பஞ்சாயத்து தலைவர் திரு.ஆதிசிவன் மூலம், வார்டு உறுப்பினர் திரு.சதிஷ் அவர்களையும், திரு.கணேசன் அவர்களையும், அழைத்துக் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.சகாயமேரி சந்திரா அவர்களிடம் இத்திட்டத்தை பற்றி கூறினார்கள். இத்திட்டத்தை கேள்விப்பட்டதும் குழந்தைகளின் நலன் கருதியும் பள்ளியின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று “எங்கள் பள்ளியில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம்” என்று பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு meeting ஏற்பாடு செய்து அவர்களிடம் இத்திட்டத்தை எடுத்து கூறினார்கள். இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இனணந்துள்ளனர். தற்போது இப்பள்ளி BIMA SCHOOL என்ற அங்கிகாரம் பெற்றது. இப்பள்ளிக்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க நிதி உதவி செய்துள்ளது LIC. சிறுசேமிப்பு என்பது குழந்தைகளுக்கு எதிர்காலத்தை நன்மை என்று எண்ணி LIC மற்றும் PUPS (பஞ்சாயத்து யூனியன் பிரைமரி பள்ளி) இனைத்து செயல்பட்டு வெற்றிகரமாக நடைமுறை படுத்தப்பட்டது.
மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஏதுவாய் இருந்த திருமதி. ஐஸ்வர்யலட்சுமி LIC வளர்ச்சி அதிகாரி அவர்களையும், அயராது உழைத்த திருமதி. தீபா இன்பசேகரன் -மற்றும் உறுதியான இருந்து ஒத்துழைப்பு கொடுத்து சேமிப்பு என்ற நிதி ஒழுகத்தையும் கல்வியோடு சேர்த்து கற்றுத்தரும் திருமதி. சகாய மேரி தலைமை ஆசிரியை -இவர் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியில் சேர்ந்தவுடன் தன்னை முழுமையாக அர்பணித்து விட்டார். அந்தநல்லூர் ஒன்றியத்தில் தனது கடின உழைப்பால் மிகச்சிறந்த பள்ளியாக கொண்டு வந்துள்ளார். மக்களிடையே சிறந்த தலைமை ஆசிரியை என்ற பெயர் பெற்றுள்ளார். திருமதி சந்திரா அவர்களுக்கும், துணை தலைமை ஆசிரியை திருமதி.மலர் அவர்களுக்கும் மற்றும் PUP பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த பெற்றோர்களுக்கும் எமது திருச்சி மாவட்ட நீதியின் நுண்ணறிவு புலனாய்வு நிருபரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்…