மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 47 கோடியே 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையக் கட்டடங்கள் மற்றும் 2 காவல் துறை கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப., தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) வினித் தேவ் வான்கேடே, இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.