16.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சட்டம் & ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக துணைக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு குற்ற தடுப்பு நடவடிக்கை பற்றி அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மத்திய மண்டல காவல் துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள்,தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப அவர்கள் மற்றும் தஞ்சை சரகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.