12.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்தியேன் இ.கா.ப அவர்கள் முன்னிலையல் தஞ்சை மண்டல காவல்துறை துணை தலைவர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஸ் ராவத் இ.கா.ப ஆகியோருடன் இணைந்து அனைத்து காவல் ஆளிநர்களும் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பானது கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலிருந்து கடந்த வருடம் வழக்கு பதிவு செய்து பிடிக்கப்பட்ட சுமார் 1 1/4 டன் போதைப்பொருட்கள் முறையே எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.