தமிழ்நாட்டில் கும்பகோணம், விருத்தாசலம் உட்பட மேலும் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாகவும், கடலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு விருத்தாசலம் தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்பட உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சியும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கோவில்பட்டியும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரித்து பழநியையும் தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக உதயமாகவுள்ளன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தனி மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.