தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் அமைந்துள்ளது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பிரிவு அலுவலகம். இந்த அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள அலுவலர் குடியிருப்பு மற்றும் பழைய அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் கட்டிடங்கள் தற்போது வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் புதர் மண்டி அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக காடு போல் காட்சியளிக்கிறது. இதில் பல விஷ பூச்சிகள் மற்றும் ஜந்துக்கள் இருந்தால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மேலும் இவை அருகில் உள்ள பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதோடு, இந்த வளாகத்திற்குள் கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகள் மூலமாக துர்நாற்றம் ஏற்படுவதோடு இது போன்ற மழைக்காலங்களில் எளிதில் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான கொசு உற்பத்திக்கும் மிகச் சிறந்த சூழலாக உருவாகியுள்ளது.
நீர்வள ஆதார அமைப்பு பிரிவு அலுவலகம் வேலை மிக்க கடுமையான வேலைகளை செய்வதால் இதை கவனிக்க நேரமில்லை என்று கூறினால் இந்த அலுவலகத்தின் அருகே அமைந்திருந்த மிதியகுடி நீர் வாய்க்கால் கால்வாய் ஒன்றை காணவில்லை என்று நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
மேலும் இந்த கால்வாய் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் வரை சென்று எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது வரை கிடப்பில் தான் உள்ளன பொது மக்களுக்காக பணி செய்யும் பொதுப்பணித்துறை பொதுவான அவர்களின் அலுவலகத்தையும் சுத்தமாக வைக்கும் பணியை செய்ய வேண்டும் என்பது இங்குள்ள பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.