கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?…


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைக்காடு பெரியகுளத்தில் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் முருகன் கோயில் குளம் மற்றும் பிற குளங்களுக்கு செல்லும் பாதையானது தற்போது கழிவு நீர் வாய்க்காலாக கட்டி சீரமைக்கப்பட்டுள்ளது…
வெள்ள நீர் செல்லும் பாதையின் பழைய அளவு பத்து அடி அகலமும் ஏழு அடி ஆழமும் கொண்ட வாய்க்கால் பாதையானது தற்போது மிகக் குறிகிய அளவில் ஒன்றை அடி அகலமும் இரண்டடி ஆழமும் கொண்டு வடிகால் வாய்க்காலாக கட்டப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு காலங்களில் தண்ணீரானது கட்டப்பட்டுள்ள பரப்பளவுக்கும் மேல் சென்று அருகாமையில் உள்ள வீடுகளில் புகும் அபாயம் 100% உள்ளது…
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது… ஒரு சிலர் அதிகார பதவியை பயன்படுத்தியும் மற்றும் சாதியின் பின்புலத்தை பயன்படுத்தியும் ஊராட்சி செயலரை தன்வசம் படுத்தி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்… இந்த மெத்தன போக்கை பொதுப்பணித்துறையும் மற்றும் ஊரக வளர்ச்சி துறையும் கண்டும் காணாதது போல் செயல்பட்டு வருகிறது. இதற்கு அரசு தானாக முன்வந்து கடுமையான நடவடிக்கை எடுக்குமா?
குறிப்பு : புனல் வாசல் செல்லும் சாலையில் கூனம் குளம் அருகே புதிய பாலம் கட்டிய பிறகும் பழைய பாலம் இடிக்கப்படாமல் வடிகாலுக்கு செல்லும் பாதையானது அடைக்கப்பட்டு பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லாதவாறு மணலை வைத்து தடுக்கப்பட்டுள்ளது… முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு.ராஜாக்கண்ணு அவர்கள் ஊராட்சி மன்ற பணியில் ஒப்பந்ததாரர் சோலைக்காடு திரு. முத்துக்குமார் அவர்கள் கீழ் இந்த புதிய பாலம் கட்டப்பட்டது.. புதிய பாலம் கட்டிய பிறகும் கூட பழைய பாலத்தின் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் செல்லும் பாதையை சீரமைக்காமல் சென்று விட்டார்… இதற்கு பொதுப்பணித்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இனிமேலாவது பொதுப்பணித்துறை இந்த அலட்சிய செயலிற்கு நடவடிக்கை எடுக்குமா?…
