அனைவருக்கும் வணக்கம் நான் கடந்த 1991 ஆண்டு பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து அதன் பிறகு தொடர்ச்சியாக பல்வேறு பதவிகளில் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றி 35 ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் வயது முதிர்வின் காரணமாகவும் 31/5/2025 வட்டாட்சியர் நிலையில் பணி ஓய்வு பெறுகிறேன் பணி ஓய்வு ஆணை மதிப்பிற்குரிய தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் முன்னிலையில் மதிப்பிற்குரிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்க பெற்றுக்கொண்டேன்.
நான் பணியாற்றிய காலத்தில் என்னுடன் பணியாற்றிய சில அலுவலர்களிடம் பணியின் சுமை காரணமாகவும் சூழ்நிலை காரணமாகவும் சில சமையங்களில் சிலரை கடிந்து கொண்டிருப்பேன் அதற்கு இந்த நேரத்தில் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இந்த பயணத்தின் போது எனக்கு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் இருந்து என்னை செதுக்கி நல்வழிபடுத்தி வழிநடத்திய அனைத்து சக நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்



நான் திருவையாறு மற்றும் பேராவூரணி வட்டப்பொருப்பு வட்டாட்சியராக பணியாற்றிய காலத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றிட உதவிய அனைத்து நிலை நல்உள்ளங்கள் கொண்ட அலுவலர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் டெங்கு மற்றும் கஜாபுயல் காலத்தில் என்னுடன் இரவு பகல் பாராது அயராது உழைத்த, ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நிலை அலுவலர்களுக்கு இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வட்டாட்சியர் பதவியிலிருந்து வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் மே 31 ம்தேதி பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது நான் 35 ஆண்டுகள் வருவாய்த் துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் இது நாள் வரை பட்டுக்கோட்டை வட்டத்தில் பணிபுரிந்த காலத்தில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் பணி ஓய்வு பெற்ற அலுவலர்களை எனது தலைமையில் எத்தனையோ அலுவலர்கலுக்கு விழா நடத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்த தறுனங்கள் ஏராளம்.
இன்று இதே நிலையில் சமூக பாதுகாப்பு திட்டம் தனி பிரிவு அலுவலகமாக இருந்தாலும் தாய் பாசத்துடன் தாய் வீடான வட்ட அலுவலகம் மூலம் சிறப்பாக விழா நடத்தி என்னை எனது துணைவியார் முன்னிலையில் பாராட்டி, கௌரவித்து வட்டாட்சியர் ஜீப்பில் வீட்டிற்கு வழியனுப்பிவைத்த வட்டாட்சியர் திரு.தர்மேந்திரா மற்றும் துணை வட்டாட்சியர்கள்,வட்ட துணை ஆய்வாளர், வருவாய் ஆய்வர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும் எனது குடும்பத்தார்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நடந்த இந்த விழா எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவாக இருக்கும்.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களும் எனக்கு பொன்னாடை அனுபவித்து பிரியாவிடை கொடுத்துள்ளார் இவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
