சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரில் நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு உரிய நீதிமன்ற தண்டனை பெற்று தந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தந்திட, 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்து வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்திட, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மோசடி வழக்கில் எதிரி வீரராகவன், கீழ்கட்டளை, சென்னை என்பவர் ஆலந்தூர், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தினால், எதிரி வீரராகவன் மீது கடந்த 28.10.2024 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த எதிரி வீரராகவன், வ/48, கீழ்கட்டளை, சென்னை என்பவரை (03.07.2025) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டது.
