பிறப்பின் அதிசயத்தை உருவாக்கும் உயிர்கள்
பிறந்திட்ட பிள்ளைகளுக்கே வாழ்ந்திடும் வாழைகள்
இல்லறத்தை இனிமையாக்க நல்லறத்தை சுமந்து
இருக்கும்வரை வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து
துன்பத்தையே தூண்களாக்கி துயரங்களை துடைத்தவர்கள்
துஞ்சாத நெஞ்சங்களாக தூக்கங்களை துறந்தவர்கள்
வையகத்தில் வழித்தேடி வாழ்வதற்கு உழைப்பைதேடி
வளர்ந்திடும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாய் கல்வியைதேடி
அன்பான பிள்ளைகளை அறிவுடன் ஆளாக்கி
ஆகாயமும் வசமாக்க தங்களை தானமாக்கி
பெற்றதற்கு பெருமையாய் பிறந்தவர்களை உயர்வாக்கி
பெற்றோர்களாய் இருந்து பொறுப்புடன் பிள்ளைகளாக்கி
ஒளிவிளக்காய் பிரகாசித்த வாழவைத்த தெய்வங்கள்
ஒளிரும் மெழுகுவர்த்தியாய் ஒளிகொடுத்த உருவங்கள்

