தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு ஊராட்சியில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.பராமரிப்பின்றி திரியும் நாய்களினால் பொது மக்களும், வாகன ஒட்டிகளும் பெரும் அச்சுறுத் தலுக்கு ஆளாவதோடு, வெறி பிடித்து கடிக்க துரத்துவதனால் சாலை விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கின்றன.
இது குறித்து ஒட்டங்காடு மக்கள் பலமுறை கிராம சபா கூட்டங்களில் மனு கொடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஊராட்சி மன்ற தலைவர் முதல், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் வரை பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. ஒட்டங்காடு கிராமத்தில் இருக்கும் தெரு நாய்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி ஆகிய வளர்ப்பு பிராணிகளை வெறிகொண்டு கடித்து ஒரு உரிமையாளர் வீட்டில் 13 கோழிகள் மற்றும் மூன்று மாத கன்று குட்டி ஒன்று கடந்த ஜூலை 26 அன்று கடித்து கொன்று விட்டது.
இது குறித்து மக்கள் கொடுத்த புகார் மனுக்களுக்கு நடவடிக்கை முறையாக எடுத்திருந்தால் பல கால்நடை இறப்புகள் & இழப்புகள் ஏற்படமால் தடுத்திருக்கலாம்.தமிழ்நாடு அரசு கால்நடை பிராணிகளை வளர்ப்பத்தை ஊக்குவிப்பதாக இருந்தால் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தாமல் அது சாத்தியமில்லை.
சென்னை போன்ற பெரிய மாநகராட்சியில் மட்டும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1913 என்ற அலைபேசி எண்ணை ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த திராவிட மாடல் அரசு கிராமங்களில் வாழும் ஏழை எளிய, நடுத்தர மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பராமரிப்பின்றி சுற்றி திரியும் தெரு நாய்களை பற்றி புகார் அளிப்பதற்கு எவ்வித அலைபேசி சேவையையும் ஏற்படுத்தாததற்கும் அதை கிராமங்களில் விரிவுப்படுத்தாமல் இருப்பதற்கும் கிராம மக்களின் மீது தமிழ்நாடு அரசு வைத்திருக்கும் அக்கறையை இந்த உலகிற்கு வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. இனியாவது நடவடிக்கை எடுக்குமா இந்த திராவிட மாடல் அரசு..
