புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் மற்றும் மராமத்து பணி என கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவு அதில் புதிதாக பல வாடகை கடைகளை கட்டி ஒப்பந்த முறையில் வாடகைக்கு விட்டு விட்டு திடீரென அதிநவீன வசதியுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதாக அறிவித்துவிட்டு ஆறு ஆண்டுகள் முன்பு பல கோடி ரூபாய் செலவு செய்து விரிவாக்கம் செய்த கட்டுமான பணிகளையும் இப்போது இடித்து தள்ளி விட்டார்கள். எந்ததொரு தொலைநோக்கு திட்டமும் இல்லாமல் மக்களின் கோடிக்கணக்கான வரி பணத்தை நகராட்சி விரயம் செய்திருக்கிறது.
புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரவு உயர்த்தப்பட்டு இருக்கிறது தற்போதைய ஆட்சியில் புதிதாக அதிநவீன வசதியுடன் பேருந்து நிலையம் கட்டுவதற்காக அரசு சார்பில் செய்தி வெளியிட்டார்கள்.அதன் பிறகு பச்சை வலையில் பந்தல் போட்டு இதுதான் தற்காலிக பேருந்து நிலையம் என மக்களை மழையிலும் வெயிலும் சகதியிலும் நிற்க வைத்துவிட்டு தற்பொழுது பேருந்து நிலைய கட்டுமான பணி நடந்து வருகிறது.இதில் ஒப்பந்ததாரர் பெயர், எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடியும் என்பது தொடர்பான அறிவிப்பு திட்ட மதிப்பீட்டின் தொகை போன்ற விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் இன்னும் வைக்கப்படவில்லை.ஆனால் மாவட்ட ஆட்சியர் மந்திரிகள் என தினந்தோறும் யாராவது ஒருவர் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ததாக செய்தி வருகின்றது.

புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவு எவ்வளவு ? இப்பொழுது எவ்வளவு பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறித்து மக்கள் கேட்டார் பதில் இல்லை. அவசரக்கதியில் குழி நோண்டி உடனுக்குடன் கம்பிகளை கட்டி அள்ளிய மண்ணையே மறுபடி உள்ளே போட்டு மூடுகிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கமிஷனை பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமலும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமலும் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் தில்லுமுல்லு செய்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டுமான பணி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மக்கள் பார்வையிட கேட்டிருக்கிறோம்..திட்ட அறிக்கைகளின் படி பணி நிறைவேற விட்டால், உயர் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்கிறார் சமூக செயல்பட்டாளர் துரை குணா.
