சென்னை, பெசனட்நகர் பகுதியில் வசிக்கும் 35 வயது பெண்மணி ஒருவர், 30.07.2025 அன்று இரவு அவரது வீட்டிலிருந்த குப்பையை எடுத்துச் சென்று வீட்டினருகில் இருந்த குப்பை தொட்டியில் கொட்டிவிட்டு வீட்டிற்கு நடந்து செல்லும்போது, ஆக்டிவா இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் மேற்படி பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மேற்படி பெண்மணி J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
J-6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி சுதாகர், வ/30, அண்ணா தெரு, திருவான்மியூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி சுதாகர் மீது ஏற்கனவே கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒரு போதைப்பொருள் வழக்கும், அடையாறு காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது தெரியவந்தது.
