மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 4.9.2025 அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
இதனுடன், “The Dravidian Pathway” மற்றும் “The Cambridge Companion to Periyar” ஆகிய இரு நூல்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதி, மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளை உலகளவில் பரப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, Oxford-இல் பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் உருவப் படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவில், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா, ஆக்ஸ்ஃபோர்டு பல்ககலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபைசல் பிரேம்ஜி, பேராசிரியர் ஜிம் லெனின்ஸ், கல்வியாளர் திருமதி பிரமிளா பெஸ்டர், பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி, பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகரன், ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
