மணப்பாறை அரசு மருத்துவமனை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த ரூபாய் 2,45,900/- பணத்தை மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் திரு.பிரதாப் தாமஸ் மற்றும் மருத்துவ உதவியாளர் திரு.பாரூக் சாம்சன் ஆகியோரின் நேர்மையான செயலினை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநகரத்தினம், இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
