முன்னாள் காவல்துறை ஐஜி எம் ராமசுப்பிரமணியன் இயக்குனராக உள்ள வெரியன் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை எக்மோரில் உள்ள நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எக்சார் தொழில்நுட்பத்தை அடையாளம் அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வுக்கான தயாரிப்பை மாணவர்களுக்கு புரியும் வகையில் மலிவான விலையிலும், எளிமையாகவும், அனைவருக்கும் எட்ட கூடியதாகவும் மற்றும் முன்னோடியான படைப்பாகவும், சர்வதேச ஆய்வுகள் மற்றும் அரசின் கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப இந்த புத்தகம், தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் நினைவாற்றலை மேம்படுத்தி பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்தை எளிதில் கண்காணிக்க இந்த தளம் வழி செய்கிறது. இந்த தளம் ஏ.ஆர்/வி.ஆர் அடிப்படையிலான 3டி உள்ளடக்கங்களுடன் வீடியோ சொற்பொழிவுகள் பாட்காஸ்ட் விரிவான குறிப்புகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்கள் முந்தைய ஆண்டு நீட் கேள்வி தொகுப்பு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு தனிப்பயன் மாதிரி தேர்வுகள் கைப்பதிவு குறிப்புகள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய பிடிஎப் புத்தகங்களுடன் ஒரு ஆண்டுக்கான சந்தா கட்டணம் ரூ 23999 என மிகக்குறைந்த கட்டணத்தில் எக்சார் நிறுவனம் மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஐஜி எம்.ராமசுப்பிரமணி பேசுகையில் பல திறமையான மாணவர்கள் அதிக கட்டணம் உள்ள பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். நாங்கள் கல்வியை வெளிப்படையான எளிதில் அணுகக்கூடிய புரியக்கூடிய வழியில் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த நீட் தேர்வு புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். நீட் என்பது கனவாகவே இருக்கும் பல மாணவர்களுக்கு இந்த புத்தகம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தலைமை விருந்தினராக காவல் துறை இணை ஆணையர் கிழக்கு மண்டலம் பண்டி கங்காதர், பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் சகாயராஜ், பாம்பே ஸ்வீட் மணி சர்மா, லட்சுமி, டாக்டர் ஜேம்ஸ் பிரேம்குமார், சந்திரசேகர பாண்டியன், நடிகர் தாமு, என் பால சரவணன், டாக்டர் எம் ஜெகதீசன், ஆகியோர் கலந்து கொண்டனர் அதேபோல இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் இலவசமாக கிடைக்க வேண்டுமென கூறி மூன்று நபர்கள் 5 லட்சம் ரூபாய் வழங்கினார்கள். மேலும் அதேபோல இந்த நிறுவனம் சார்பில் முன்னாள் ஐஜி எம் ராமசுப்பிரமணியம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறையினர் பிள்ளைகள் 50 பேருக்கு நீட் தேர்வுக்கான இந்த புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
