நகர்ந்து செல்கிறது இரவும் பகலும்
நாடகம் நடத்தும் வெளிச்சமும் இருட்டும்
பிறக்கும் உயிர்கள் வாழ்வும் சாவும்
பிழையின்றி வாழ்வதே உயிரும் உறவும்
ஏக்கத்தில் வளரும் அன்பும் ஆசையும்
எதையும் சாதிக்கும் எழுதுகோலும் எழுத்தும்
இளமையில் இனிக்கும் காமமும் மோகமும்
இதயத்தை வழிநடத்தும் எண்ணமும் செயலும்
மனதுக்குள் போராடும் உழைப்பும் சோம்பேறியும்
மங்காத துடிப்பு தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்
கெட்டதை அகற்றும் உண்மையும் நேர்மையும்
கெடாமல் வாழ்வது திறமையும் தைரியமும்
இல்லறம் கைகொடுக்கும் இன்பமும் துன்பமும்
இல்லத்தை அலங்கரிக்கும் மனைவியும் மந்திரமும்
வாழ்வதை நிர்ணயிக்கும் பணியும் பிணியும்
வாழ்ந்ததை சொல்லும் வறுமையும் திறமையும்
முதிர்வை கொண்டாடும் வெற்றியும் தோல்வியும்
முண்டினாலும் விடாது முடிவும் இறப்பும்
இருக்கும்வரை காப்போம் உடலையும் உள்ளத்தையும்
இறக்கும்வரை கொடுப்போம் அன்பையும் பாசத்தையும்

- சி.சுபாஷ் சந்திர போஸ், காவல்துணைக்கண்காணிப்பாளர் (ஓய்வு)
