சென்னை கோட்டூர்புரத்தில் 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அப்போது, 11ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி நிறைவடைய உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8.7 லட்சம் பேர் பொதுதேர்வு எழுத உள்ளனர். செய்முறை தேர்வு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது:
‘’மாணவர்கள் நீண்ட கால கோரிக்கை என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் பதற்றம் இல்லாமல், உற்சாகத்துடன் பொதுத்தேர்வுகளை எழுத வேண்டும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
