சென்னை திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் கலைவாணன் என்பவர் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஆதார் அட்டையை நகல் எடுக்க ஜெராக்ஸ் கடைக்குச் சென்றபோது 5 சவரன் தாலிக் கொடியை தவற விட்டு சென்று விட்டார்.
ஜெராக்ஸ் கடையில் வாடிக்கையாளர் கலைவாணன் தவறவிட்டுச் சென்ற 5 சவரன் தாலியை ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி காவல் ஆணையர் N.இளங்கோவன், முன்னிலையில் உரிமையாளரிடம் தாலி கொடியை ஒப்படைத்தார்.
இதில் D3 குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவராசன், D1 உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர் .
மனிதாபத்துடனும் நேர்மையுடன் செயல்பட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் மனைவிக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
