தென்காசி மாவட்டத்தில் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய சண்முகசுந்தரம், “அரசு நிரந்தர வேலை வாங்கித் தருவேன்” என்ற பெயரில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றப்பட்ட தொகை – பல கோடிக்கும் மேல்!
ஒவ்வொருவரிடமும் ₹4 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை வசூல்
வேலைக்காக வாழ்நாள் சேமிப்பையே ஒப்படைத்த பல குடும்பங்கள் பாதிப்பு
“சில மாதங்களில் நியமன ஆணை வரும்” என்ற பெயரில் ஏமாற்று வேலை
போலி வேலை நியமனங்கள்
ஓஏ, டிரைவர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற தற்காலிக வேலைகளில் சிலரை அமர்த்தினார்
சம்பளமும் அரசு தருவதாகச் சொல்லி, சில மாதங்கள் தனது கையிலிருந்து கொடுத்தார்
பின்னர் அரசு பட்டியலில் பெயரே இல்லை என்பது வெளிச்சம்
காணாமல் போன PRO
கடந்த 7 மாதங்களாக தென்காசியில் காணவில்லை
தற்போது சென்னையில் தங்கி வருவதாக தகவல் – ஆனால் உறுதியான தகவல் இல்லை
இவர் திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் “மாரி மாரி” தங்கி வருவதாகவும் தகவல்
இவருக்குப் பதிலாக புதிய PRO இன்னும் நியமிக்கப்படவில்லை
போலீஸ் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?
ஏற்கனவே தென்காசியில் பணிபுரிந்த போது, பொது கலெக்டர் கையொப்பத்தை போலியாக போட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுத்து suspend செய்யப்பட்டவர்.
சுமார் 5 மாதங்கள் பணியில்லாமல் இருந்தவர், கடந்த ஜூலை மாதம் சேலம் போக்குவரத்து துறையில் சேர்ந்தார்.
பின்னர் மருத்துவ விடுப்பில் சென்று, இப்போது மதுரை & திருச்சியில் தங்கி வருவதாக தகவல்.
மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஏமாந்தவர்கள் விசாரித்தபோது,
“அவரைத் தேடி தினமும் பலர் வருவதால் அவர் வீட்டுக்கே வருவதில்லை, ஹோட்டல்களில் தங்கி வருகின்றார்” என்று அவரது மனைவி கூறியதாக தகவல்.
மக்கள் புகார்கள் – ஆனால் நடவடிக்கை இல்லை!
பொதுமக்கள் புகார் அளித்த இடங்கள்:
- தென்காசி காவல் நிலையம்
- சென்னை கோயம்பேடு காவல் நிலையம்
- சேலம் கலெக்டர் அலுவலகம்
- தென்காசி கலெக்டர் அலுவலகம்
- தென்காசி DSP அலுவலகம்
இதுவரை சண்முகசுந்தரத்தின் மீது அதிகாரப்பூர்வ நடவடிக்கை எதுவும் இல்லை!
பொதுமக்களின் குரல்
“அவரது பெயரையும் பதவியையும் நம்பி பணம் கொடுத்தோம். எங்கள் சேமிப்பு, கடன், தங்கம் எல்லாம் போய்விட்டது.” – ஏமாந்தவர்.
“அரசு தரப்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இவரை யார் காப்பாற்றுகிறார்கள்?” – மக்கள் கேள்வி.
அரசியல் & உறவினர் ஆதரவு?
சண்முகசுந்தரத்தின் அண்ணன் மகன் கார்த்தி, சென்னை முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிவதாக சொல்லி வருகிறார்.
“அவரின் மூலம் வேலை வாங்கித் தருவேன்” எனக் கூறி பலரை சென்னைக்கு அழைத்து சென்று, கார்த்தியுடன் சந்திக்க வைத்தும் ஏமாற்றம்
சில வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் இவருக்கு ஆதரவாக இருப்பதாக சந்தேகம்
ஏமாந்தவர்களுக்கு மிரட்டல்!
“என்னை தொந்தரவு செய்தால், பணம் கொடுத்தவர்மீதே FIR போடுவேன்” என்று மிரட்டல் விடுக்கிறார்.
புகார் அளித்தவர்களுக்கு “பணம் திருப்பித் தர தாமதம் ஆகும்” என போலீஸ் ஸ்டேஷனில் எவ்வளவு time வேணும்னாலும் வாங்குவேன் என்று கூறி வருகிறார்.
ஏமாந்தவர்கள் இப்போது “எப்படி எங்கள் பணத்தை மீட்டெடுப்பது?” என்று குழப்பத்தில் தவிக்கின்றனர்.
மக்கள் கோரிக்கை
“சண்முகசுந்தரத்தை உடனடியாக கைது செய்து, எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும்!” – ஏமாந்தவர்கள் கோரிக்கை
