தலைமுறைகள் மூன்றானாலும் தாய்மைக்கு நிகரில்லை
தலைசாய்ந்து படுத்தாலும் தாய்முகம் அகலவில்லை
பாதைகாட்டிய படிப்புக்கு தாய்உழைப்பே வழிகாட்டி
பாசமாய்தந்த பத்துரூபாய் காவல்வேலைக்கு கைகாட்டி
நித்தம் அலைந்து நிம்மதியை இழந்து நிலையான வாழ்க்கைக்கு உதவியாய் இருந்து
தாய்முகம் பார்ப்பதற்கு புகைப்படம் மறந்து
தன்னலத்தை பார்க்காது துயில்வதை துறந்து
கல்வியை கொடுத்தாய் கழனியில் கஷ்டப்பட்டு
குடும்பத்தை காத்தாய் ஏழ்மையில் இன்னல்பட்டு
அன்னையின் ஆளுமை ஆலயமாய் வாழ்கிறது
அணையாத தீபமாய் ஆழ்மனதில் பிரகாசிக்கிறது
பெற்றெடுத்த பிள்ளை பெருமையோடு வாழ்கிறேன்
பெற்றுத்தந்த தாய்முகத்தை தலைவணங்கி தேடுகிறேன்

சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல்துணைக்கண்காணிப்பாளர் (ஓய்வு)
