தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் அவர்களுக்கான சுடுகாடு வயல்வெளியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாடு செல்லும் சாலை தனிநபர் தனது பட்டா இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆட்கள் நடந்து செல்ல மட்டும் பாதை விட்டுவிட்டு மொத்த இடத்தையும் அடைத்து விட்டனர்.
இறந்தவர்களின் உடலை கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்கள் சிரமத்துடன் எடுத்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.இருபது ஆண்டுகளுக்கு முன்பும் இதே நிலை இருந்து வந்தது. அந்த சமயம் சண்முகநாதன் அவர்களின் பெரியம்மா காளியம்மாள் இறந்த தருணம் வட்டாட்சியர் முன்னிலையில் அந்த சாலை எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அந்த சாலை தனி நபர் அடைத்து விட்டனர். சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் உடயநாடு ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய லோடுமேன் செல்லதுரை என்பவர் உடல் நல குறைவால் இறந்தார்.
அவருடைய உடலை அமரர் ஊர்தி மூலம் எடுத்து செல்ல சாலை வசதி செய்து தர வேண்டும். இல்லை என்றால் உடலை சாலையில் தகனம் செய்வோம் என்று கட்டைகளை ரோட்டில் அடுக்கி வைத்து உறவினர்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் காவல்ஆய்வாளர் மற்றும் பேராவூரணி காவல்ஆய்வாளர் வசந்தா அங்கு வந்து உடலை ஆட்கள் பாடை கட்டி சுமந்து செல்லுமாறு மக்களை சமாதானம் செய்ய முயன்றனர். இதை உறவினர்களும் பொதுமக்களும் ஏற்க மறுத்து விட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சார்ஆட்சியர் பாலச்சந்தர் உத்தரவின் பேரில், பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் N.கவிதா, RI, VAO, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் குலாம்கணி ஆகியோர் நேரில் வந்து மக்களிடம் சமாதானம் செய்ய முயன்றனர்.
பொதுமக்கள் சமாதானம் ஆக மறுத்து விட்டனர். இந்த நிலையில் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். அதன்பின்னர் நில அளவீடு செய்து தனி நபர் ஆக்கிரமிப்பு பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு அங்குள்ள சாலையை சரி செய்தனர். பொதுமக்கள் அந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாலையில் சென்று செல்லதுரை அவர்களுக்கு உடல் தகனம் செய்ததோடு அந்த சாலைக்கு செல்லதுரை சாலை என்று பெயரும் வைத்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் டாக்டர் அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு அனைவருக்கும் உடையநாடு கிராம இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் மனம்நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.