தஞ்சை மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மஹாலில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் முனைவர் வேத. குஞ்சருளன் தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் சி.சிவகுமார், எஸ் கருப்பையன் , அ.அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய துணை அமைப்பாளர் எஸ்.கருப்பையன் அனைவரையும் வரவேற்று பேசினார். குடியரசுதின கொடியினை தனம் திருமண மஹால் உரிமையாளர்
கோ. நீலகண்டன் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்களாக பேராவூரணி ஒன்றிய அமைப்பாளர் சி.சிவகுமார், நகர அமைப்பாளர் அ.அன்பானந்தம், மகளிர் ஒன்றிய அமைப்பாளர் புஷ்பலதா, துணை அமைப்பாளர் வடிவாம்பாள், நகர அமைப்பாளர் சுந்தரி, பத்திரிக்கையாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் த.நீலகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய அமைப்பாளர் பன்னீர்செல்வம், துணை அமைப்பாளர் யோகேஸ்வரன், விவசாய அணி அமைப்பாளர்
ஆர். ரத்தினம், இரத்ததான பிரிவு அமைப்பாளர் வி.உதயகுமார் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்சியில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் நகர அமைப்பாளர் அ.அன்பானந்தம் நன்றி கூறினார்.