தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 72வது குடியரசு தின விழா 26.01.2021 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரதம் இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ். இராமன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு (RTI Free Training Class) 30.01.2021 அன்று அரும்பாக்கத்தில் உள்ள நேஷனல் ஸ்டார் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது.
தேசியவாதி G.P.சாரதி அவர்கள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக திருக்குறள் மதி அரசு அவர்கள் கலந்துகொண்டார். சமுக ஆர்வலர் காசிமாயன் அவர்கள் பயிற்சி வகுப்பை சிறப்பான முறையில் நடத்தினர். பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்று பயனுற்றனர். பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மதிய உணவுடன் பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது.
நமது நகரம் ஆசிரியர் S.சரவணன், பீப்பிள் டுடே ஆசிரியர் G.சத்யநாராயணன், பேனா முள் ஆசிரியர் பாடி.பா.கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் P.ராஜன், மக்கள் விருப்பம் ஆசிரியர் D.M.தருமராஜா, நுண்ணறிவு ஆசிரியர் R.சிவகுமார், தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் G.வினோத், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தேனை பார்வை ஆசிரியர் சரண், மின்னொளி ஆசிரியர் M.L.வீரா, மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், முருகானந்தம், திராவிட உதயம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, ருக்மணி, சாம்சன் செல்வகுமார், கணேச பாண்டி, ஜேம்ஸ், டெய்லி நியூஸ் பாலாஜி கந்தசாமி, ரவிக்குமார் உள்ளிட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.